உலக உயர் இரத்த அழுத்த தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் உங்கள் இரத்த அழுத்தத்தை சரியாக அளவிடுவது மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதென்பதுமாகும்.
உயர் இரத்த அழுத்தம் இந்த நாட்டில் தொற்றாத நோய்களில் ஒன்றாகும். இது மக்களிடையே பொதுவான நோயாகக் காணப்படுகின்றது.
உயர் இரத்த அழுத்தம் என்பது உடலில் இரத்தவோட்ட விகிதத்தின் அதிகரிப்பாகும். நாட்டின் 45 வீதம் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.
இது பல நோய்களுக்கு மூலகாரணமாக அமையுமென சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க நல்ல உணவு உட்பட முறையான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறினார்.
அவ்வப்போது இரத்த அழுத்தத்தை பரிசீலித்து முறையான வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் இந்நோயினால் ஏற்படும் திடீர் மரணங்களைத் தவிர்க்க முடியுமெனவும் சுகாதாரத் திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.