(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் லொத்தர் விநியோகஸ்தர்களின் மேலதிக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தாம் இணங்கவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
மேலதிக கொடுப்பனவு தொகையை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து தாம் விலகுவதாக அதன் தலைமைச் செயலாளர் பி.எஸ்.எஸ் மாரசிங்க தெரிவித்துள்ளார்.