சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இந்த பேரணியானது மன்னார் சதொச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளது.