NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்வரும் 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

உள்ளூர் முட்டை ஒன்று 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதன்படி மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles