2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எரிவாயு விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையினை 1,045 ரூபாவினால் அதிகரித்திருக்க வேண்டும் எனவும், பொது மக்களை கருத்தில் கொண்டு மாத்திரம் 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை சுமார் 100 டொலர்களால் அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், டொலர் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக இந்த மாத இறுதியில் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ மற்றும் லாப் ஆகிய எரிவாயு நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலனின் விலையினை இரு நிறுவனங்களும் 145 ரூபாவால் அதிகரிக்கரித்துள்ளன.