NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு!

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன.

கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று (08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்பு ஓடியது.

இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதன் சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles