NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நாவின் பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கு தடை விதித்து இஸ்ரேலில் சட்டம் நிறைவேற்றம் – அமெரிக்கா கடும் கண்டனம்!

பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து, அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையிலும், அவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா நடைமுறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும் என ஐ.நா கவலை தெரியவிட்டுள்ளது.

குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles