டெல்லியில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் சிறப்பு ஆணையர் எஸ்.எஸ்.யாதவ், கருத்துத் தெரிவிக்கையில் ‘டெல்லி முழுவதும் தபால் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள், நோயியல் ஆய்வகங்களின் மாதிரி சேகரிப்புகள் தொடர்ந்து செயல்படும்.
மாநாடு நடக்கும் நாட்களில் மருந்துகள் தவிர ஒன்லைன் டெலிவரி சேவைகள் நிறுத்தப்படும். பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்