NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஒருநாடு; இருதேசம்’ தமிழ் பரீட்சை வினாத்தாள் கேள்வியால் குழப்பம்!

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்படும் தரம் 11 தமிழ்மொழிப் பாடப் பரீட்சை வினாத்தாளில் ‘ஒருநாடு; இருதேசம்’ தொடர்பாக இடம்பெற்றுள்ள வினாவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் 11 ஆம் தர மாணவர்களுக்கு நடத்தப்படும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் தமிழ் மொழிக்கான பரீட்சை நேற்றுமுன் தினம் நடைபெற்றது

இதன் போது தமிழ்மொழிப் பாடத்தின் பகுதி – 1 வினாத்தாளில் மிகப் பொருத்தமான விடை 3 யைத் தெரிவு செய்க என்ற தலைப்புடன் வெளியான வினாக்களில், ஒருநாடு: இருதேசம்’ எனத் தமிழர்கள் முழங்கினர். இவ் வாக்கியம் (1)தனி வாக்கியம் (2)கலப்பு வாக்கியம் (3) தொடர் வாக்கியம் (4) கூட்டு வாக்கியம் எனக் குறிப்பிடப்பட்ட கேள்வியே சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் குறித்த கேள்வி தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ‘ஒருநாடு: இருதேசம்’ என்ற கொள்கையைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது அரசியல் கொள்கையாக கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles