NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே பிறந்தநாளை கொண்ட பாகிஸ்தான் குடும்பம் கின்னஸ் சாதனை படைத்தது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கின்னஸ் சாதனை
படைத்துள்ளது.

அமீர் அலி என்பவரும் அவரது மனைவி குதேஜா ஆகியோருக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த திகதி ஒரே நாளாகும். அதாவது ஓகஸ்ட் முதலாம் திகதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.

இந்நிலையில்இந்த விடயம் இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை தம்வசம் வைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி 20ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அமீர் அலி – குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் முதலாம் திகதி என்பது சிறப்பம்சமாகும். இவர்கள் 1991ஆம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர்.

Share:

Related Articles