NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வை அறிவித்தார் கே.எல்.ராகுல் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளியான இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

32 வயதான கே.எல்.ராகுல் 50 டெஸ்ட் போட்டிகளில் 2863 ஓட்டங்களையும், 77 ஒருநாள் போட்டிகளில், 2851 ஓட்டங்களையும், 72 சர்வதேச இருபத்துக்கு இருபது போட்டிகளில் 2265 ஓட்டங்களையும், ஐபிஎல் போட்டிகளில் 4,683 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இந்த நிலையில் கே.எல்.ராகுலின் இன்ஸ்டா பக்க பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இருக்கின்றேன்.

மிகவும் யோசித்த பிறகே இந்த முடிவினை எடுத்திருக்கின்றேன்.

கிரிக்கெட் எனது வாழ்வில் பல வருடங்களாக முக்கிய பாகமாக இருந்து வருகின்றது.

அணியினர், எனது குடும்பத்தினர், நண்பர்களென எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்காக ஆவலுடன் இருக்கிறேன்.

கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் மிகவும் இரசித்தேன்.

இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி” என கே.எல்.ராகுல் பதிவிட்டிருந்தார்.

பின்னர் அவர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

41 ஆண்டுகளாக நீடித்த டெஸ்ட் சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

இருப்பினும் அந்த இன்ஸ்டா பதிவின் (screen shot) ஸ்கிரீன் சொட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Share:

Related Articles