கடந்த 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த தகவல்களை தனது பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால் தொற்றுநோய்க்கான உடனடி பதிலளிப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் இந்த பிரிவில், தட்டம்மை உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்து மக்கள் விசாரிக்க முடியும்.