NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடன் மறுசீரமைப்பு குறித்து பரவும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்ச வேலைத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயணித்து, தற்போது எவ்வாறு வெற்றிகரமான பிரதிபலன்கள் எட்டப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்

அத்துடன், இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் அளவு 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு அதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களகாகும். 11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்புக் கடன்களாகும். 14.7 பில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்களாகும். அதில் 12.5 பில்லியன் டொலர்கள் பிணைமுறிப் பத்திரங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்-

கடன் மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து, பல்வேறு கருத்துக்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவிக்கப்படுகின்ற போதும் அவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles