NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப்பெண் விமானத்தில் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வீட்டு வேலைக்காக கட்டார் சென்றிருந்த இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொரட்டுவ – கோரல்வெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான முசு-662 மூலம் கட்டாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் வேளை, மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles