NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ள STF…

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் திருடப்படுவதை தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, மின்சார கேபிள்களை துண்டிப்பதைத் தடுக்க, இரவுவேளைக்குப் பிறகு நெடுஞ்சாலையில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையான நபர்களே இத்தகைய குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Related Articles