கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் வியாபாரி ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.