கண்டி, குலுகம்மன-யடிஹலகல வீதியில் குருந்துகஹமட பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குலுகம்மன-யடிஹலகல வீதியில் 3வது வளைவுக்கு அருகில் பஸ் வீதியை விட்டு விலகி பக்கவாட்டு வீதியில் கவிழ்ந்ததாக அலதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கண்டி, பேராதெனிய மற்றும் திட்டபஜ்ஜல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 29 பேர் காயமடைந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் பஸ் மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்ததாகவும், வீதியின் வளைவை எடுக்க முடியாமல் திடீரென வீதியை விட்டு விலகிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்