NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பளையில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் காயம்!

கம்பளை – பன்விலதென்ன பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று காலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் 19 வயதான இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வீடொன்றில் வளர்த்ததாக கூறப்படும் நாய் ஒன்று இறந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Share:

Related Articles