NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை – தள்ளிப்போகும் சத்திர சிகிச்சைகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

காலி – கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் வரை பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், நோயாளிகளின் பராமரிப்பு சேவையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 556ஆக இருந்தாலும், தற்போது 460 மருத்துவர்களே உள்ளனர்.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் எஸ்.பி.யு.எம் ரங்கவிடம் இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த போது, சில வைத்தியர்கள் வெளிநாடு சென்றதே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை திறக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles