NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருங்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து..!

பாதுக்கை மீபேயில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கருங்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று ஹங்வெல்ல எம்புலுகம சந்திக்கு அருகில் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த டிப்பர் ரக வாகனம் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்து களனி கங்கையின் கிளை கால்வாய்க்கு அருகில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles