NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

காசா மீது இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம், போருக்கு முன் எப்படி இருந்த காசா, தற்போது எப்படியாகியிருக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில், காசா நகரை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தையும், ஒக்டோபர் 21ஆம் திகதி செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு, இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் எந்த அளவுக்கு உருக்குலைந்துள்ளது என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்களில், கட்டடம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஓரிடம், ஒக்டோபரில் எடுத்த புகைப்படத்தில் சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது.

காசா மீது தொடர்ந்து இன்று 21ஆவது நாளாக வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.

Share:

Related Articles