NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலநிலை மாற்றம் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு…!

மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் இன்று அதிகாலை முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles