NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலாவதியான ரின் மீன்கள் விற்பனை – 6 பேர் கைது!

காலாவதியான ரின் மீன்களின் திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்த சீன பிரஜை உட்பட 6 பேர் பேலியகொட பொலிஸாரால் நேற்று முன்தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ரின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இந்த ரின் மீன்களை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles