NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி முகத்திடல் போராட்டத்தின் ஸ்தாபக உறுப்பினர் தற்கொலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவதற்காக காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புத்தி பிரபோத கருணாரத்ன என்ற குறித்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் இறப்பு தொடர்பான பதிவொன்றை இட்டவாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடைசி உரை எனக் கூறப்படும் இந்த பதிவும்; சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால், அந்த பதிவு அவர் எழுதியது அல்ல என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles