NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராண்ட்பாஸ் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் நேற்று (29) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share:

Related Articles