NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு…!

மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.moha.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொதுநிர்வாக அமைச்சு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles