(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியா – ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் இடையில் உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்து உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
டீழுஐ ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில முதல்வரிடம் செந்தில் தொண்டமான் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக இந்தியா – திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், இலங்கை பக்தர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவிலை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஜகன்மோகன் ரெட்டியும் வழங்கினார்.
சந்திப்பின் இறுதியில் ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி, திருப்பதி பெருமாள் சுவாமி சிலையை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.