NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குத்தகை வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லும் நபர்களைப் பற்றி ஜனாதிபதியிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்து, குத்தகை கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்..!

கடந்த இரண்டு வாரங்களாக ஆயிரக்கணக்கான குத்தகை வாகனங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை வலுக்கட்டாயமாக கொள்ளையடிக்கும் சீசர்கள் எனப்படும் குத்தகை வாகனங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லும் நபர்களைப் பற்றி ஜனாதிபதியிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்து, குத்தகை கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் ஈடுபட்டனர்.

குத்தகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த குத்தகை கடன் தவணை செலுத்துவோர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பொலிஸாரின் தலையீட்டுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் இருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததோடு அந்த சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

குத்தகைக்கு விடப்படும் வாகனங்களை வலுக்கட்டாயமாக கடத்துவதற்கு எதிராக சட்டங்கள் இருந்தும், சீசர்கள் மூலம் வாகனங்களை கடத்தும் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.

குத்தகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் அத்தோடு கடந்த இரண்டு வாரங்களில் சுமார் ஆயிரம் வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கருத்து  தெரிவித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற குழுவினர் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து இன்றைய தினம் முன்வைக்கப்பட்ட மகஜரை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டதோடு எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஒன்றைப் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

Share:

Related Articles