(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தொல்லியல் நடவடிக்கைகளுக்கு எனக்கூறி முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் திருகோணமலை திரியாய விகாரை பகுதியில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை கோரியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்க விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்று இன்று (16) இந்த விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து நேற்று நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பும், திருகோணமலை திரியாய விகாரைக்கு என 3,000 ஏக்கர் நிரப்பரப்பையும் தொல்பொருள் தினைக்களம் கோரியுள்ளது.
இந்நிலையில், வன வள பாதுகாப்பு தினைக்களம் உட்பட பல துறைகளுக்கு சொந்தமான பெரும் நிலப்பரப்புகளை தொல்லியல் நடவடிக்கைகளுக்கு என்று கோரப்படுகின்றமையின் அடிப்படைதன்மை குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.