NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேகாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கேகாலையில் இன்று (14) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேனாலை – கலாபிட்ட மட துனுமல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் கெப் வண்டியில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் டி- 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles