NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வார கால அவகாசம்!

உலகக் கிண்ண தொடருக்கான உடற்தகுதியை நிரூபிப்பதற்கு நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போது, அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் தற்போது, காயத்தில் இருந்து மீண்டு வருவதுடன், நியூசிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், உலகக் கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெறுவதற்கு வில்லியம்சனுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles