NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோல்ஃப் மைதானத்தில் சந்தித்த டிரம்ப் – தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் எதிர்பாராத சந்திப்பில் ஒன்றாக கோல்ப் விளையாடியுள்ளனர்.

இருவேறு துறைகளைச் சேர்ந்த இரண்டு முக்கிய பிரமுகர்களின் எதிர்பாராத சந்திப்பில், மகேந்திர சிங் தோனியும், டொனால்ட் டிரம்பும் நட்புரீதியிலான கோல்ஃப் சுற்றுக்கு ஒன்றாக மைதானத்துக்கு வந்தனர்.

டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பும் போட்டியும் இடம்பெற்றுள்ளது.

இருவரும் கோல்ஃப் உடையில் இருந்ததுடன், தோனி நீண்ட தலைமுடியுடனும் டிரம்ப் சிவப்பு தொப்பியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலையதளங்களில் வைரலாகியுள்ளன.

அத்துடன், டிரம்புடன் தோனி கோல்ஃப் விளையாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

கிரிக்கெட் களத்தில் அமைதியான நடத்தைக் கொண்டவராக அறியப்பட்ட தோனி மற்றும் அமெரிக்க அரசியலில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நபராக இருக்கும் டிரம்ப் ஆகியோரின் எதிர்பாராத இந்த சந்திப்பு குறித்து பலரும் சுவாரஸ்யமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Share:

Related Articles