NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்…!

கோழி இறைச்சியின் விலை குறைவடைய வாய்ப்பு உள்ளதாக கால்நடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அஜித் குணசேகர, வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் படி உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம்.

இப்போது, இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்து வருகின்றனர். அதன்படி எதிர்காலத்திலும் தட்டுப்பாடு இருக்காது.

டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து மீதமாக இருக்கும் என நம்புகிறோம். இதன் மூலம் விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம்.

உற்பத்தியை தொடர அரசு எங்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. மிகப் பெரிய பிரச்சினையான சோளத்தை இலங்கைக்கு கொண்டு வந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்காக பயன்படுத்த முடியும். அப்போது தான் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும்.

அதற்கமைய, எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles