NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராக ரொஷான் ரணசிங்க நியமனம்!

மவ்பிக ஜனதா கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க நேற்று சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை மாவட்ட தலைவராகவும் மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை மவ்பிக ஜனதா கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர வழங்கியுள்ளார்.

தேசப்பற்றுள்ள தேசியவாத முகாமை தமது கட்சி பலப்படுத்தி வருவதாக மவ்பிக ஜனதா கட்சியின் தலைவரான தொழில்முனைவோர் திலித் ஜயவீர இதன் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மாவட்ட தலைவராக தொழில்முனைவோர் உபாலி ஜயசேகர, கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ஏ.ஆர்.தினேந்திர ஜோன், இரத்தினபுரி மாவட்ட தலைவராக பிரபாத் டி அல்விஸ் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

Share:

Related Articles