NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் உமர் கிரெம்லீவ் இலங்கை விஜயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லீவ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (17) இவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் குறித்த குழுவை கட்டுநாயக்க விமான நிலையதிற்குச் சென்று வரவேற்றிருந்தனர்.

குறித்த விஜயத்தின் போது, உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சம்பியன் மற்றும் 1988 சியோல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ராய் ஜோன்ஸ் ஜூனியர், ஜெர்மனியின் தற்போதைய ஃப்ளைவெயிட் குத்துச்சண்டை சம்பியன் ஆகியோரும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles