அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
“இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் நமது சர்வதேச கல்வி முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவும், சிறந்த இடம்பெயர்வு முறையை உருவாக்க உதவும்” என்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் வருகையாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவைக் கொண்ட மாணவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் சர்வதேச மாணவர் விசா கட்டணம் 710 அவுஸ்திரேலிய டொலரில் இருந்து 1600 டொரலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரையான ஆண்டில் நிகர குடியேற்றம் 60 வீதமாக அதிகரித்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.