NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிகரெட் புகைத்தப்படி ரீல்ஸ் எடுத்த சிறுமி – வெளுத்து வாங்கிய தந்தை!

சமூக வலைத்தள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து விடுகிறது.

அந்த வகையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சாலையில் சிகரெட் புகைத்தபடி சென்றவாறு ரீல்ஸ் உருவாக்கி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

இந்நிலையில் வீடியோவை சிறுமியின் தந்தையும் பார்த்துள்ளார். ஆவேசம் அடைந்த அவர் அந்த சிறுமியை பெல்ட்டால் அடித்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், அந்த சிறுமி தன்னை அடிக்காதீர்கள் என தந்தையிடம் கெஞ்சியும், அவர் தொடர்ந்து தாக்குவது போன்று காட்சிகள் உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles