NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கூப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (21) முற்பகல் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் கரியமில வாயு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரும் இலங்கையும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles