NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் கையிருப்பு இன்று நாட்டுக்கு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் கையிருப்பு இன்று (02) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி அண்மையில் நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் hஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எரிவாயு நிலைய விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சினோபெக் நிறுவனம் நாடு முழுவதும் 150 எரிவாயு நிலையங்களுடன் செயல்படவுள்ளது.

மின் மற்றும் வலுசக்தி அமைச்சின் கூற்றுப்படி, சினோபெக் நேரடியாக அந்நிய செலாவணியை செலவழித்து எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவருகிறது.

இதனால் இலங்கையிலுள்ள உள்ளுர் நிதி நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும், 12 மாத நிதி வசதிகளுடன் இந்த எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சினோபெக் நிறுவனத்தினால் 45,000 மெட்ரிக் டொன் எரிபொருள் இலங்கைக்கு முதல் கப்பலாக கொண்டு வரப்பட்டதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles