NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலி நாட்டில் கோர விபத்து- 7 பேர் பலி…!

தென் அமெரிக்காவில் சிலி நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டிலா பாஹ நகரின் அருகே பஸ்ஸின் மீது புகையிரதம் மோதி கோர விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது நேற்று(01.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

சன் பெட்ரொ டிலா பாஹ நகரின் அருகே உள்ள தொடருந்து தண்டவாளத்தை பஸ் கடக்க முயற்சித்த போது வேகமாக வந்த புகையிரதம் பஸ்ஸின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 பயணிகளுடன் சென்ற பஸ்ஸில் , விபத்தில் சிக்கி 7 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share:

Related Articles