NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் உணவகத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் சிக்கி 31 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஒரு உணவகத்தில் நேற்று (21) பெட்ரோலிய வாயு கசிவினால் இடம்பெற்ற வெடி விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்திற்கு இடையே தீயை அணைக்க போராடி வருவதை சம்பவ இடத்து வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. சீனாவில் 3 நாள் ட்ராகன் படகு திருவிழா விடுமுறை கொண்டாடப்பட இருக்கிற நிலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் காயமடைந்தவர்களின் சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், முக்கியமான துறைகளின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Share:

Related Articles