NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீன பிரஜைகள் இருவரை தாக்கிய நேபாள பிரஜைகள் கைது..!

சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலில் வைத்து தாக்கி விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நேபாள பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபாள நாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர், சீனப் பிரஜைகள் குழுவுடன் உரையாடிய பின்னர் அவர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles