இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாவலப்பிட்டி மாஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய மதிலுக்கான அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் உடல் மீது மண் மேடு விழுந்தது.
குறித்த மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி, வெரலுகசின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.