NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு!

இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஜெனிவா நோக்கி நேற்று (09) பயணமாகியுள்ளாா். 

“நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ஊசிகள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை. இன்றையளவில் நாட்டில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை. எனவே, இந்த நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் கடுமையான கவனத்தை செலுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தவுள்ளதாக” பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.

Share:

Related Articles