NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செக் குடியரசின் முதலாவது பயணிகள் விமானம் நாட்டை வந்தடைந்தது!

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு செக் குடியரசில் இருந்து இயங்கும் Lot Polish Airlines பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தது.

செக் குடியரசில் இருந்து இலங்கைக்கு இயங்கும் Lot Polish Airlines இன் முதலாவது பயணிகள் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு செக் குடியரசில் இருந்து இயங்கும் முதல் பயணிகள் விமானத்தில் 252 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகைத் தந்ததுடன், அவர்களை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இன்முகத்துடன் வரவேற்றனர்.

Share:

Related Articles