NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செனல் 4 காணொளியை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு !

செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை :

இதற்கிடையில் உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நலனுக்காக அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பாதுகாப்பு அமைச்சு மதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

செனல் 4 வழங்கிய ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் பலவீனமாக நிரூபிக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எழும் திட்டமிடப்படாத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles