NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் புகைப்படங்கள், வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு எழுத்துமூல அனுமதி பெற வேண்டும்!

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை, அனைத்து அரச நிறுவனங்களும் பெறுமாறு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும்போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக செயற்படுவது அவசியமானது எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

Share:

Related Articles