NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி – இலங்கை தமிழரசு கட்சிக்கு இடையில் சந்திப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடனான கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுக்களின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடந்த காலங்களில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு தமிழரசுக் கட்சியினால் வலியுறுத்தப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக 19ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாதகவும் அதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles