NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (26) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கலந்துரையாடலில் இணைவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles