இந்தியாவின் 76ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா கடமை பாதை பகுதியில் நேற்று நடைபெற்றன.
அதனை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திரால் சவுக் பகுதியில் முதன்முறையாக இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த கொடியை 3 தலைமுறையை சேர்ந்தவர்கள் சேர்ந்து ஏற்றி வைத்ததாக இந்திய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
தலைமுறைகளின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கான பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றை இந்த செயற்பாடு வெளிப்படுத்துவதாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.